வாழ்க்கைக் குறிப்பு

ஓசூரில் உள்ள ஸ்ரீ விநாயகா பரிபூரண உடல்நல சிகிச்சை மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

என் பெயர் சி. நா. கங்காதரன் , ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு. நான் 1988-ம் வருடம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள டைட்டன் கடிகார நிறுவனத்தில் ஸ்டேனோ கிளர்க்காகச் சேர்ந்து கொள்முதல் துறையில் செயல் அலுவலராகப் பணி உயர்வு பெற்று 2016-வது வருடம் விருப்ப ஓய்வு பெற்றேன். 2007-ம் வருடம் என் மகள் பிரியதர்ஷினி அவர்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டார். ஆறு மாதக்காலமாக ஆங்கில மருத்துவத்தில் தீர்வு கிடைக்காத நிலையில், அக்குபங்சர் சிகிச்சையில் ஒரு நிமிடத்திற்குள் தீர்வு கிடைத்ததைக் கண்டு வியந்தேன்.

கணநேரத்தில் தீர்வு கொடுத்த இம்மருத்துவத்தை, பஞ்சபூத கோட்பாட்டின் அடிப்படையில் 2008-வது வருடம் கற்க ஆரம்பித்து 2009-வது வருடம் இளநிலை பட்டமும் 2010-வது வருடம் முதுநிலைப் பட்டமும் பெற்றேன். கற்ற மருத்துவத்தை பயிற்சி செய்ய "ஸ்ரீ விநாயகா பரிபூரண உடல்நல சிகிச்சை மையம்" என்ற பெயரில் ஒரு மருத்துவ மையத்தைத் திறந்தேன். சிகிச்சையில் 60% வெற்றி கிடைத்த எமக்கு உடல் இயக்கத்தைச் சார்ந்த பல விஷயங்களில் மட்டுமின்றி நோயிற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டோம். எனவே, மேற்கொண்டு மருத்துவத்தில் தேடுதலை தொடர்ந்தோம்.

அக்குபங்சர் மருத்துவம் என்றாலே சீன அக்குபங்சர் மருத்துவம்தான் தலைச்சிறந்தது என்பதை அறிந்த நாம் தொன்மையான சீன அக்குபங்சர் மருத்துவத்தை ஆங்கிலத்தில் கற்றோம். ஆங்கிலத்தில் கற்கும்பொழுது ஓரளவுக்கு எம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும், தமிழில் இக்கருத்துக்களை ஏன் எழுதிப் பார்த்துப் புரிந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் இம்மருத்துவத்தை தமிழில் மொழிப்பெயர்க்க ஆரம்பித்தோம். எம்தாய்மொழித் தமிழில் மொழிப் பெயர்த்தவைகளை படித்துப் பார்த்தபின் மருத்துவம் நன்கு மனதில் பதிந்தது. தொடர்ந்து ஆறேழு வருடங்களாக யின்-யாங் தத்துவம் மற்றும் உயிர்ச் சக்தி தத்துவத்தின் மூலம் மருத்துவத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டோம். இப்போது உடல் இயக்கம் நன்றாகப் புரிய ஆரம்பித்தது. 2017-வது ஆண்டு ஜனவரித் திங்கள் "திருக்குறள் வழியில் தொன்மையான சீன அக்குபங்சர் மருத்துவம்" என்ற தலைப்பில் இறையருளால் முதல் நூலைத் தமிழில் நாம் வெளியிட்டோம். முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, மேற்கண்ட நூலின் தொடர்ச்சியாக 2018-வது ஆண்டு ஜனவரித் திங்கள் 2 மற்றும் 3-ம் பகுதிகளையும், 2019-வது ஆண்டு ஜனவரித் திங்கள் 4,5,6 மற்றும் 7-ம் பகுதிகளையும் வெளியிட்டோம்

2018-வது வருடம் அக்டோபர் திங்கள் வியர்க்கும்பொழுது உடலில் வியர்வை வெளியேறுவதற்கு பதில் இரத்தம் வழிந்த அர்ச்சனா எனும் சிறுமியைப் பற்றித் தொலைக்காட்சி செய்தி வாயிலாகக் கேள்விப்பட்டோம். இலட்சத்தில் ஒருவருக்கு இந்நோய் வருவதாக ஆங்கில மருத்துவம் கூறிக் கொண்டிருந்த நிலையில் இச்சிறுமி இருக்கும் இடத்தைக் கண்டுப்பிடித்து அக்குபங்சர் சிகிச்சையில் இறையருளால் தீர்வு கொடுத்தோம். இதை, அன்றைய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.பிரபாகர் அவர்கள் 15.10.2018 அன்று எமக்குப் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினார். யின்-யாங் தத்துவத்தின் அடிப்படையில் இச்சகிச்சைக்கு நாம் எடுத்துக் கொண்ட நேரம் ஒரு நிமிடம் மட்டும்தான். இந்துதமிழ், தினகரன், மாலைமுரசு, தினத்தந்தி மற்றும் காலைக்கதிர் போன்ற தமிழ் தினசரி நாளேடுகள் இச்செய்தியை 16.10.2018 அன்று வெளியிட்டன.

எமது நூல்களுக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, 2020-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 8,9 மற்றும் 10-ம் பகுதிகளையும், 2023-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 11,12 மற்றும் 13-ம் பகுதிகளையும் வெளியிட்டோம், தொன்மையான சீன அக்குபங்சர் மருத்துவத்தை ஓரளவிற்கு முழுமையாகக் கற்க இன்னும் 7 பகுதிகளை வெளியிட உள்ளோம். இறைவன் அருளால் இது நிச்சயம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

2017-வது ஆண்டு ஜனவரித் திங்கள் "திருக்குறள் வழியில் தொன்மையான சீன அக்குபங்சர் மருத்துவம்" என்ற தலைப்பில் இறையருளால் முதல் நூலை தமிழில் நாம் வெளியிட்டோம். முதல் நூலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மேற்கண்ட நூலின் தொடர்ச்சியாக 2018-வது ஆண்டு ஜனவரித் திங்கள் 2 மற்றும் 3-ம் பகுதிகளையும் 2019-வது ஆண்டு ஜனவரித் திங்கள் மாதம் 4,5,6 மற்றும் 7-ம் பகுதிகளையும் வெளியிட்டோம்

2018-வது வருடம் அக்டோபர் திங்கள் வியர்க்கும் போது உடலில் வியர்வை வெளியேறுவதற்கு பதில் இரத்தம் வழிந்த அர்ச்சனா எனும் சிறுமியைப் பற்றி தொலைக்காட்சி செய்தி வாயிலாக கேள்விப்பட்டோம். இலட்சத்தில் ஒருவருக்கு இந்நோய் வருவதாக ஆங்கில மருத்துவம் கூறிக்கொண்டிருந்த நிலையில் இச்சிறுமி இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து அக்குபங்சர் சிகிச்சையில் இறையருளால் தீர்வுகொடுத்தோம். இதை அன்றைய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் திரு.பிரபாகர் அவர்கள் 15.10.2018 அன்று எமக்குப் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினார். யின்-யாங்தத்துவத்தின் அடிப்படையில் இச்சகிச்சைக்கு நாம் எடுத்துக் கொண்ட நேரம் ஒரு நிமிடம் மட்டும் தான். இந்துதமிழ், தினகரன், மாலைமுரசு, தினத்தந்தி மற்றும் காலைக்கதிர் போன்ற தமிழ் தினசரி நாளேடுகள் இச்செய்தியை 16.10.2018 அன்று வெளியிட்டன.

எமது நூல்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 2020-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 8,9 மற்றும் 10-ம் பகுதிகளையும் 2023-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 11,12 மற்றும் 13-ம் பகுதிகளையும் வெளியிட்டோம்,

தொன்மையான சீன அக்குபங்சர் மருத்துவத்தை ஓரளவிற்கு முழுமையாகக் கற்க இன்னும் 7 பகுதிகளை வெளியிட உள்ளோம். இறைவன் அருளால் இது நிச்சயம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

Profile

Welcome to Sri Vinayaka Perfect Health Care Centre, Hosur.

My name is C.N. Gangadharan , Hosur, Krishnagiri District, Tamilnadu. I joined Titan Watches Limited, Hosur in 1988 as Stenoclerk and retired under VRS in 2016 as Purchase Executive.

During 2007, my daughter Ms Priyadarshini suffered from severe headache (migraine). As she was not cured in allopathy treatment, I took her to acupuncture treatment. I am surprised to note that she got immediate relief within seconds in this treatment. As I was more curious to know how this miracle happened, I started learning acupuncture in the year 2008 based on Five Elements Theory. I completed my Diploma in acupuncture in 2009 and Master Degree in 2010.

I opened a clinic namely "Sri Vinayaka Perfect Health Care Centre" in Hosur and started practicing by giving treatment. Even though, we got 60% results in the treatment, we could not fully understand the body function and the cause of disease in Five Elements Theory.

We came to know that acupuncture was evolved in China as Traditional Chinese Medicine (TCM) of Acupuncture, and we started learning this medicine in English. Even though, we could understand the concepts of acupuncture in English, we started translating in our mother tongue-Tamil in order to have a better understanding. After reading those pages which we translated, the understanding of TCM concepts was better than in English. For about 6 to 7 years, we started translating the TCM concepts based on Yin-Yang and Qi Principles rather than 5 elements theory. Now, we can say that we have got a better understanding on how the organs are functioning and the cause for disease also. During the year January 2017, we wrote our first book, namely “Traditional Chinese Medicine of Acupuncture (based on Yin-Yang) in the footpath of Thirukural”. As the first book received good response among the readers, we released the 2nd and 3rd volumes in the next year, January 2018. In the subsequent year January 2019, we released 4th, 5th, 6th and 7th volumes in acupuncture.

During October 2018, we came to know through a TV channel that a girl called Archana (8) was suffering from blood sweating instead of fluid sweating. There was a debate in allopathy that this disease may come in a lakh of people. We found out the location of Archana and gave treatment in acupuncture. To our surprise, it took less than a minute for us to arrest the blood sweating in Yin-Yang acupuncture treatment. Mr Prabakar, then the District Collector of Krishnagiri, honoured me by draping a braided shawl in a meeting for curing this disease. This news was published in leading daily newspapers in Tamil like Hindu Tamil, Dinakaran, Daily Thanthi and Malai Murasu etc.

To have a complete knowledge about TCM concepts, we have decided to release another 7 volumes in the years to come shortly. This will surely happen as the Universe is with me.