பணிகள்

மருத்துவத்தை ‘கசடற கற்க’ தாய்மொழிக் கல்வியே சிறந்த வழியாகும். எனவே, ஆங்கிலத்தில் உள்ள தொன்மையான சீன அக்குபங்சர் மருத்துவ கருத்துக்களை உணர்வோடு உள்வாங்கியப பின் தமிழில் மொழிப் பெயர்த்துக் கொடுத்துள்ளோம். உடல் இயக்கத்தை மருத்துவம் எனும் ஏட்டின் வாயிலாக உணர்வுடன் உள்வாங்கி அது மனதில் குடியிருக்கும்பொழுது காலத்திற்கும் மறக்காது. இனி, நோயிற்கான காரணத்தை அறிந்து கொள்வதோடு உடலைத் தாக்கும் நோயின் பல்வேறு தன்மைகளைப் போக்குவதற்கு ஏற்ற அக்குபங்சர் புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து 100% வெற்றி பெற முடியும்.

தொன்மையான சீன அக்குபங்சர் மருத்துவத்தின் (TCM) சிறப்பு என்ன?

5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இம்மருத்துவமானது, ஒரு முழுமையான மருத்துவ முறையாகும். இம்மருத்துவத்தைக் கொண்டு நோயை உணர்ந்தறிய முடியும், சிகிச்சை அளிக்க முடியும் மற்றும் நோய் வராமல் தடுக்க முடியும். தமிழ்நாட்டில் கற்பிக்கப்படும் அக்குபங்சர் மருத்துவத்திற்கும் சீனாவில் கற்பிக்கப்படும் அக்குபங்சர் மருத்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

தமிழ்நாட்டில் கற்பிக்கப்படும் அக்குபங்சர் மருத்துவத்திற்கும் சீனாவில் கற்பிக்கப்படும் அக்குபங்சர் மருத்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

சீன அக்குபங்சர் மருத்துவத்திற்கு அடித்தளமாக இரு தத்துவங்களும் ஒரு கோட்பாடும் உள்ளன. அவை கீழ்வருமாறு:

  • யின்-யாங் தத்துவம்

  • உயிர் சக்தி தத்துவம்

  • பஞ்சபூத கோட்பாடு

சீன அக்குபங்சர் மருத்துவம் படிப்படியாக வளர யின்-யாங் தத்துவமும் உயிர்ச்சக்தி தத்துவமும் காரணமாக இருந்திருக்கின்றன. ஒப்புமைக்காக, நம் உள்ளங்கை அளவிற்கு யின்-யாங் தத்துவம் இருக்கிறது என்றால் பஞ்சபூதக் கோட்பாடு என்பது உள்ளங்கையில் ஓர் புள்ளி அளவிற்குக் கூட இல்லை என்ற உண்மையை இங்கே நாம்கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.

நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் எனும் பஞ்சபூதங்கள் எவ்வாறு உருவாயின? பிறகு, ஒன்று செயல்படுவதன் மூலம் மற்றவையோடு எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்ற அடிப்படையிலும் "அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கிறது" என்ற மருத்துவக் கூற்றிற்கு ஏற்பவும், ஒவ்வொரு பூதத்திற்கும் சொந்தமான உள்ளுறுப்பு ஒழுங்காகச் செயல்படுவதன் மூலம் இதர உள்ளுறுப்புகளோடு எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்ற அடிப்படையிலும் அமைந்த மருத்துவமே பஞ்சபூத மருத்துவ முறையாகும்.

சீன அக்குபங்சர் மருத்துவத்தில் பஞ்சபூதக் கோட்பாடு கொண்ட மருத்துவ முறையில் அதிகபட்சமாக 100 பக்கங்களுக்கு மிகாமல் பல்வேறு நூல்கள் கூறியுள்ளன. ஆனால், யின்-யாங் தத்துவம் மற்றும் உயிர்ச்சக்தி தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு நூல்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களில் உடல் இயக்கத்தை விளக்கியுள்ளன என்பதால் இத்தத்துவங்களின் முக்கியத்துவத்தையும் ஆழத்தையும் நீங்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

எனவே, தமிழ்நாட்டில் கற்பிக்கப்படும் பஞ்சபூத அடிப்படையிலான அக்குபங்சர் மருத்துவம் கவர்ச்சிகரமானது, ஆழமில்லாதது மற்றும் முழுமை இல்லாதது. எனவே, தமிழ்நாட்டில் அக்குபங்சர் பயின்ற பெரும்பாலானவர்களில் ஒரு சிலர் மட்டும் முழுநேர தொழிலில் இருக்கிறார்கள். மற்றவர்களில் சிலர் பகுதி நேரமாகவும், சிலர் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சை கொடுத்துக் கொண்டு காலம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மையாகும்.

நம் உடல் உழைப்பால் சம்பாதித்த ஒவ்வொரு பைசாவையும் சிக்கனமான முறையிலும் தேவைக்கேற்ப சரியான முறையிலும் செலவு செய்வது அவசியமாகும். ஒரு சிலர் ஆயிரம் அல்லது 2 ஆயிரம் ரூபாய்க்கு பஞ்சபூதக் கோட்பாட்டின் அடிப்படையிலான அக்குபங்சர் மருத்துவத்தை கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதற்காகப் பெயரளவிற்கு மருத்துவத்தைக் கற்று தயவு செய்து உங்கள் பணத்தை வீணாக்க (கரியாக்க) வேண்டாம்.

சீனாவில் கற்பிக்கப்படும் அக்குபங்சர் மருத்துவமானது இரு தத்துவங்களின் அடிப்படையிலும், ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலும் இருப்பதால், ஒரு முழுமையான மருத்துவமாக இருப்பதோடு இப்படிப்பிற்குப் பின் ஒருவர் தன்னம்பிக்கையுடன் முழுநேர தொழிலில் ஈடுபடுவதற்கு உதவிச் செய்கிறது என்றால் அது மிகையாகாது.

"கற்க கசடற" எனும் திருக்குறளுக்கு ஏற்பத் தொன்மையான சீன அக்குபங்சர் மருத்துவத்தை முழுமையாகக் கற்றுக்கொள்ளும்பொழுது ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ எனும் முதுமொழிக்கு இணையான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் இங்கே அழுத்தம் திருத்தமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

Mission

To learn the medicine, the best language is one's mother tongue. The concepts given in TCM have been taken in our minds with inner feelings to get it translated in our mother tongue. If we understand the concept which is written in Tamil with our inner feelings, we will never forget in our lifetime. Now, we can understand the cause of disease and the disease patterns so that we can select suitable acupuncture points to get 100% results in each and every case.

What is TCM known for?

Traditional Chinese Medicine (TCM) is a complete medical system that has been used to diagnose, treat, and prevent illnesses for more than 5,000 years. TCM is based on belief in yin and yang, defined as opposing energies, such as earth and heaven, winter and summer, and happiness and sadness.

What is the difference between Acupuncture in Tamilnadu and China?

The three pillars of Chinese Medicine are given below:

  • Yin-Yang Principle

  • Qi Principle

  • Five Elements Theory

The Chinese Medicine has been developing based on Yin-Yang Principle and Qi Principle. For example, if we assume that the Yin-Yang principle is the full size of a palm, then the Five Elements Theory is not even equal to a dot in this palm.

How did the Five Elements like Water, Earth, Fire, Air and Heaven came into exist? The basic qualities of Five Elements and Interrelationship among Five Elements was co-related to functions of the internal organs, and this study is called Five Elements Acupuncture Theory.

In various books of Chinese Medicine, the Five Elements Theory was briefed not more than 100 pages. But, based on Yin-Yang and Qi Principles, these books have briefed for more than1,000 pages. Hope, now you will understand the importance of these principles.

The so-far courses conducted in various academies in Tamilnadu are ONLY ATTRACTIVE, NOT DEEP AND NOT WHOLISTIC. The fact is that, among the learned acupuncture in Tamilnadu, only a few people are doing full time practice. Among the rest, a few people are doing part-time practice and the rest within the family.

The hard-earned money should be spent economically and in the right way. As there are attractive advertisements for acupuncture courses for Rs.1000/- or Rs.2000/- based on Five Elements Theory, please do not get cheated by joining there.

The TCM of Acupuncture taught in China is based on two principles and one theory, which is a wholistic study. If we learn the TCM concepts in one’s mother tongue, we can do wonders by servicing the society with preventing illness and treating the diseases of complex patterns.